விதைக்கரனை வனவியல்
மரங்களுக்கான  திசு வளர்ப்பு நுட்பங்கள்

வளர்திசு வளர்ப்புகளின் வகைகள் :
தாவர திசு வளர்ப்பு 5 பகுதிகளாக ஊடகத்தை மையமாக கொண்டு பிரிக்கபடுகின்றன.

அ) வளர்திசு வளர்ப்பு:
மிக நுணுக்கமான சிறிய முலையிலிருந்து 2mm க்கும் குறைவான இலையை எடுத்து வளர்ப்பது தான் வளர்திசு வளர்ப்பாகும். இந்த முறையால், நோயில்லாச் செடிகளை உருவாக்க முடியும்.

ஆ) தோலின்மேல் தடிப்பு வளர்ப்பு :
சில நேரங்களில் வளர்ப்பு ஊடகத்தில் இடப்படும் செடிப் பாகமானது தோலின் மேல் தடிப்பை உருவாக்குகிறது. இம்முறையில் மரம் சார்ந்த செடிகளில் புதிய தண்டுகளை உருவாக்க சிரமமாகிறது.

இ) நீர்மத்தில் மிதக்க விடுதல் மூலம் அணுக்களை வளர்த்தல் :
தோலின் மேல் தடிப்பு பாகம் தான் திவிர வளர்ப்பில் பிரிக்கபடுகின்றன. இப்படிச் செய்வதன் மூலம்  திசுவறை மிதவை உருவாகிறது.
இந்த திசுவறை மிதவை வளர்ப்பு மூலம் நேரடியாக நாம் எதிர்பாக்கும் ஒரு பொருளை உருவாக்க முடியும்.

 ஈ) உயித்தாது வளர்ப்பு :
உயிரணு சுற்றுச் சுவர் இந்த முறையில் நொதியம் மூலம் நீக்கப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம் நார்மப் பொருள் கரைந்துவிடுகிறது. திசுவரை சுவர் நீக்கியதால் அயல் நாட்டு மரபணுவை உட்புகுத்தலோ அல்லது நீக்குதலோ அல்லது வேவ்வறு சிற்றினங்களின் அணுக்களை சேர்த்தலோ எளிதாக முடியும்.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016